சென்னையில் 166 இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அமைச்சர் கே.என்.நேரு

புதன், 10 நவம்பர் 2021 (18:59 IST)
சென்னையில் 166 இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சர் கேஎன் நேரு அவர்கள் தெரிவித்துள்ளார்
 
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் அதிக மழை காரணமாக நீர் தேங்கி இருக்கும் 166 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் வரும் காலங்களில் இந்த இடங்களில் நீர் தேங்காமல் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் கனமழை எச்சரிக்கை தொடர்ந்து 400 மின் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தண்ணீர் தேங்காமல் அவ்வப்போது உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கே என் நேரு அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்