தூணுக்கும் சுவருக்கும் இடையே மாட்டிக்கொண்ட சிறுவன் – தீயணப்புத் துறையினர் போராட்டம் !

Webdunia
வியாழன், 26 டிசம்பர் 2019 (08:24 IST)
செங்குன்றம் பகுதியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த நித்தீஷ் என்ற 12 வயது சிறுவன் சுவர்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்குன்றம், முண்டியம்மன் நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவருக்கு 12 வயதில் நித்திஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை தன்னுடைய வீட்டில் நித்தீஷ் நேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது, வீட்டின் வெளிப்புறம் உள்ள கேட் அருகே உள்ள சுவருக்கும் தூணுக்கும் இடையில் நுழைந்து செல்ல முற்பட்டுள்ளார்.

ஆனால் அவரது உடல் சுவருக்கும் தூணுக்கும் இடையே மாட்டிக் கொண்டுள்ளது. அதில் இருந்து அவரால் வெளிவர முடியாததால் கத்திக் கூப்பாடு போட்டுள்ளார். உடனடியாக அவரது பெற்றோர் அவரை மீட்க முயற்சிக்க அவர்களாலும் அவரை மீட்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது. விரைந்து வந்த அவர்கள் தூணின் சில பகுதிகளை உடைத்தும், நித்திஷின் ஆடைகளை கத்திரிக்கோலால் அறுத்தும் அவரை மீட்க முயன்றனர். கிட்டத்தட்ட 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நித்திஷ் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டார். அதன் பிறகு அவர் நல்ல உடல்நலத்தோடு உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்