கேரளா அரசு திவாலாகும் நிலையில் உள்ளது - மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர்

Sinoj
வியாழன், 8 பிப்ரவரி 2024 (21:06 IST)
கேரளம் அரசு திவாலாகும் நிலையில் உள்ளது மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், சமீபத்தில், மத்திய பாஜக அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தது.

இதுகுறித்து காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய எதிர்க்கட்சிகள் விமர்சனம் தெரிவித்தன.

இந்த  நிலையில், தென்மாநிலங்களுக்கு சமமான வரிகள் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்று  மத்திய அரசுக்கு எதிராக  கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில்  இன்று டெல்லியில் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டம் பற்றி  மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியதாவது:  ‘’இந்தியா கூட்டணியின் மூன்று கூட்டாளிகள் இணைந்து நாடகம் நடத்துகின்றனர். இது அவர்களின் இயலாமை, ஊழலை மறைப்பதற்கான அரசியல் நாடகம்.  நாட்டிலேயே பொருளாதார கொள்கைகளை தவறாக கையாண்ட மாநிலம் கேரளம்.  2016 முதல் 2023 வரை கேரளாவுக்கு ரூ.1,10,000 கோடி   நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர். கேரளம் அரசு திவாலாகும் நிலையில் உள்ளது, அங்கு, இலங்கையில்  உள்ள பொருளாதார நெருக்கடியைவிட மோசமாக உள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்