கீழச்சேரியில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை: உடனடியாக விரைந்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (13:57 IST)
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் 12ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அந்த பள்ளிக்கு உடனடியாக கல்வி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் விரைந்து சென்று மாணவி தற்கொலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை சம்பவத்தின்போது அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் உள்பட யாரும் முதல் மூன்று நாட்கள் வரவில்லை என்றும் எனவே தான் அந்த தற்கொலை விவகாரம் மிக தீவிரமாகி போராட்டம் வன்முறையாக மாறியது என்றும் குற்றஞ்சாட்டப் பட்டது
 
இதனையடுத்து கீழச்சேரியில் பள்ளி மாணவி தற்கொலை செய்த ஒரு சில மணி நேரங்களில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடனடியாக கீழச்சேரி சென்று உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
இன்னொரு கள்ளக்குறிச்சி சம்பவம் போல் நடந்து விடக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து அமைச்சருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்