அந்த அறிக்கையில், புதிய ரத்த நாளம் மூலம் இருதய தமணியில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்டது என்றும், இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த 4 அடைப்புகள் அகற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது, சிறப்பு இருதய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவருடைய உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.