பொதுச்சொத்தை நாசம் செய்யும் தண்டச்சோறு: கஸ்தூரி கூறியது யாரை?

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (07:45 IST)
நேற்று பாமகவினர் 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தியதில் ஒரு சில வன்முறை சம்பவங்களும் நடைபெற்றது. குறிப்பாக சென்னை அருகே ரயில் ஒன்றை நிறுத்தி கல் எறிந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது 
 
இந்த சம்பவம் குறித்து நடிகை கஸ்தூரி தனது ஆதங்கத்தை டுவிட்டரில் தெரிவித்திருந்தார் கஸ்தூரியின் காட்டமான டுவிட்டர் பதிவுக்கு நெட்டிசன் ஒருவர் ’ஆடையை அவுத்து போட்டு தன் உடம்பை காட்டி சம்பாதிக்கும் உனக்கு எப்படி தெரியும் ஏழையின் கஷ்டம்? என்று பதிவு செய்திருந்தார் 
 
இந்த பதிவுக்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி ’பொதுச்சொத்தை நாசம் செய்யும் தங்களுக்கு எப்படி தெரியும் உழைத்துச் சாப்பிடும் எங்கள் வாழ்க்கை’ என்று பதிவு செய்துள்ளார். நெட்டிசனின் பதிவும் கஸ்தூரியின் பதிலடியும் தற்போது வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்