காஸ்மீர் டூ கன்னியாகுமரி சைக்கிள் பயணம் - இளைஞரின் பசுமை இந்தியா விழிப்புணர்வு!

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (11:41 IST)
கோவையை சேர்ந்த இளைஞர் சிவசூரியன் செந்தில்ராமன் இவர் தனது சிறுவயதில் இருந்து சைக்கிள் பயணம் மீது சமூகத்தின் மீது மிகவும் அக்கறை கொண்டவர். அதே போல சைக்கிளில் பயணம் செய்து மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் பசுமை இந்தியா மற்றும் புவி வெப்பமயமாதல் குறித்து பள்ளி கல்லூரி மானவர்களைடையே பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனிமனித சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
 
கடந்த 3ஆம் தேதி காஸ்மீரில் துவக்கிய இந்த விழிப்புணர்வு பயணத்தை   கன்னியாகுமரி வரை சென்று முடிவு செய்கிறார். இந்நிலையில் கோவை வந்த அவருக்கு கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என 4200 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு சாதனையை நிகழ்த்தும் சிவசூரியனுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்