தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளோம்: மத்தியஅமைச்சர் அமித்ஷா பேட்டி
வியாழன், 30 மார்ச் 2023 (08:31 IST)
தமிழ்நாட்டில் அதிமுகவுடன் தான் கூட்டணியில் உள்ளோம் என மத்திய உள்துறை அமைச்சர் உறுதிப்பட கூடிய இருப்பதை அடுத்து அதிமுக பாஜக கூட்டணி தொடர்கிறது என்பது உறுதியாகி உள்ளது
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அதிமுக மற்றும் பாஜக தமிழக தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டனர். இதனால் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக விலகி விட்டதாக கருதப்பட்டது.
மேலும் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் தான் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் அண்ணாமலை கூறி இருந்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் பாஜகவின் கட்சியை கட்டமைப்பு வலுவாக இல்லை. அதை மேம்படுத்த உழைத்து வருகிறோம்
நாங்கள் வலு குறைவாக இருக்கும் இடங்களில் கூட்டணி கட்சிகள் கைகொடுக்கும், எனவே தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்