கடந்த சனிக்கிழமை சென்னை அம்பேத்கர் திடலில் மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை கண்டித்து கண்டன கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்த கண்டன கூட்டத்தில் பல துறைகளை சேர்ந்த ஆளுமைகளும் வந்திருந்தனர். கூட்டத்தில் பேசிய பலரும் அரங்கத்தை அதிர வைத்தனர். இதில் பேசிய திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் முதல்வரை மரபணு மாற்றப்பட்ட வீரியமில்லாத முதல்வர் என விமர்சித்தார்.
இயக்குநர் கரு.பழனியப்பன் பேசியதாவது, ஒரு வாரத்திற்கு முன்னர் சென்னையில் மரபணு மாற்றப்பட்ட கடுகைப் பற்றி ஒரு கூட்டத்துக்கு அழைத்தார்கள். ஆனால் இந்த நாட்டில் மரபணு மாற்றப்பட்ட முதலமைச்சர் இருக்கார், அதைப்பற்றி யாரும் இங்கு கவலைப்படவில்லை. மத்திய அரசு அதைத்தானே செய்கிறது.
முதலமைச்சருக்கு ஒரு வீரியம் இருக்கும், ஒரு குணம் இருக்கும். ஆனால் அதெல்லாம் வேண்டாம் என ஊசியப் போட்டு மரபணு மாற்றப்பட்ட முதலமைச்சரைத்தான் வச்சிருக்காங்க. மக்களைப் முழுவதும் மரபணு மாற்றப்பட்ட ஆடாக மாற்ற முயற்சி நடக்கிறது என கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.