மோடி பேச்ச அவங்க கேட்டா..? கார்த்தி சிதம்பரம் வேதனை!

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2020 (11:08 IST)
மோடி இந்த இந்த இக்கட்டான காலகட்டத்தில் மூடநம்பிக்கைகளை வளர்க்கும் விதமாக பேசி வருகிறார் என கார்த்தி சிதம்பரம் வேதனை. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் முதல் 10 நாட்கள் முடிவடைந்துள்ளது. இதனால் பிரதமர் மோடி நேற்று மக்களிடையே உரையாற்றினார். 
 
அப்போது, ஏப்ரல் 5 ஆம் தேதி மிகவும் முக்கியமான நாள் என்றும் அன்று இரவு 9 மணிக்கு மக்கள் வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அணைத்து விட்டு அதற்கு பதிலாக டார்ச் லைட், அகல் விளக்குகள் அல்லது மெழுகுவர்த்திகளை ஏற்றுமாறு கேட்டுக்கொண்டார். 
 
இந்நிலையில் இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம். அவர் கூறியதாவது, இந்த இக்கட்டான காலகட்டத்தில் எவ்வளவு நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது, மருத்துவர்களுக்கு எந்த மாதிரியான பாதுகாப்பு கொடுப்பது என்பதைப் பற்றி கூறாமல் மூடநம்பிக்கைகளை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசி வருகிறார், இதனை விஞ்ஞானிகள் கேட்டால் ஏமாற்றமடைவார்கள் என்று விமர்சித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்