கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இந்த நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தற்போது வெளிமாநில தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலம் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் திடீரென கர்நாடக மாநில முதல்வரை சந்தித்த கட்டிட பணிகளை மேற்கொள்ளும் முதலாளிகள் வெளிமாநில தொழிலாளிகளை அவரவர் சொந்த மாநிலத்திற்கு அனுப்ப வேண்டாம் என்றும் தற்போது கட்டிடப் பணிகள் உள்பட அனைத்து பணிகளும் தொடங்கிவிட்ட நிலையில் அந்த பணிகளுக்கு வெளிமாநில தொழிலாளர்கள் தேவை என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்
இதனை அடுத்து வெளிமாநில தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களை கோருவதற்கான அனுமதியை கர்நாடக முதல்வர் அனுப்பாமல் வைத்து இருப்பதாகவும் இது குறித்து வெளிமாநில தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் முடிவெடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
கடுமையான ஊரடங்கு உத்தரவு நேரத்தில் பசியும் பட்டினியுமாக இருந்த வெளிமாநில தொழிலாளர்கள் தற்போது பணிகள் தொடங்கும்போது தங்கள் சொந்த ஊருக்கு செல்வதால் பணிகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி தொழிலாளர்களின் வருமானமும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது