தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் காலையிலேயே பொது இடத்தில் வாக்கிங் செல்லும் புகைப்படம் வைரலாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் நிலையில் அதன் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக நேற்று வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அங்கேயே இருந்து பல பகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
கமல்ஹாசனுக்கு கோவை சொந்த ஊராக இல்லாத நிலையில் மக்களிடையே பரிட்சயம் ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று காலை எந்தவித ஆடம்பரமும் இன்றி சாலையில் சோலோவாக வாக்கிங் சென்றிருக்கிறார் கமல்ஹாசன். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையும் இந்த மாதம் முழுவதும் கட்சியின் தொகுதி பிரச்சாரங்கள் செல்வது தவிர்த்த மீத நேரங்கள் கமல் கோவையிலேயே கழிக்க உள்ளதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.