சினிமா ஊழியர்களுக்கு பாதுகாப்பு குழு – கமல்ஹாசன் அதிரடி!

Webdunia
செவ்வாய், 10 மார்ச் 2020 (11:40 IST)
இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தையடுத்து சினிமா ஊழியர்களுக்கு பாதுகாப்பு குழு அமைக்க முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் ஷங்கர் இயக்கத்தில் நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்ததில் மூன்று பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து சினிமா துறையில் ஊழியர்களுக்கு உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. சினிமா ஊழியர்களின் பாதுகாப்புக்கு சம்பந்தப்பட்ட பட நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என கமல்ஹாசன் அறிக்கை விடுத்தார்.

இதையடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் ஊழியர்கள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இயக்குனர் ஷங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் சினிமா ஊழியர்களுக்கு “பாதுகாப்பு குழு” ஒன்றை அமைக்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்த பாதுகாப்பு குழுவின் செயல்பாடுகள் என்ன என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்