சினிமாவில் நுழைவதற்கு முன்பே த்ரிஷாவுடன் சோப்பு விளம்பரத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் - வீடியோ!

திங்கள், 9 மார்ச் 2020 (14:37 IST)
இன்று வளர்ந்து வரும் முன்னனி நடிகர்களில் பிரபலமான ஒருவர் தான் சிவகார்த்திகேயன். இவர் பல்வேறு துயரங்களை தாண்டி தனது அயராத உழைப்பின் மூலம் இந்த இடத்தை பிடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கிங்ஸ் ஆஃப் காமெடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி, காம்பேரராக தன்னை வளர்த்துக்கொண்டு தனது சென்ஸ் ஆஃப்  ஹியூமரால் உலக தமிழர்கள் அனைவரையும் சிரிக்க வைத்து பின்னர் சினிமா எனும் சிம்மாசனம் ஏறினார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரெமோ, நம்ம வீடு பிள்ளை, மிஸ்டர் லோக்கல், ரஜினி முருகன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்த சிவகார்த்திகேயன் தனது அடுத்தகட்ட முயற்சியில் தயாரிப்பாளராக அவதாரமெடுத்து சினிமா துறையில் கிடு கிடுவென வளர்ந்து வருகிறார். ஆனால், நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு தகவல் தற்போது கிடைத்துள்ளது.

ஆம், சிவகார்த்திகேயன் சினிமாவில் நுழைவதற்கு முன்பே நடிகை த்ரிஷாவுடன் சேர்ந்து vivel soap விளம்பரத்தில் நடித்துள்ளார் . இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதை அடுத்து சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ...

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்