சினிமாவிற்கு முழுக்குப் போடும் கமல்ஹாசன் - ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2017 (17:07 IST)
அரசியலில் நுழைந்த பின் சினிமாவில் நடிக்க மாட்டேன் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.


 

 
நடிகர் கமல்ஹாசன் விரைவில் தான் அரசியலுக்கு வர இருப்பதாக  ஊடகங்களிலும், செய்தியாளர்களிடமும் தொடர்ந்து கூறி வருகிறார். மேலும், எந்த கட்சியிலும் சேர மாட்டேன் எனவும் தனிக்கட்சியே தொடங்குவேன் என அவர் அறிவித்துள்ளார்.
 
இந்நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் “ இந்தியா பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு. எனவே, ஒரே மொழி. ஒரே இனம் என்பதை நான் ஆதரிக்க மாட்டேன். ஊழலை ஒழிப்பது என் முதல் நோக்கம். அரசியல் சூழலில் உள்ள மாசு வாழ்வாதாரத்தை அழித்துக்கொண்டிருக்கிறது. ஊழலை நகர்த்தவில்லையென்றால் வேறு எந்த வேலையும் நடக்காது. 
 
நான் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி. அது மக்களுக்கான கட்சியாக இருக்கும். அரசியலில் நான் ஒரு உதயமூர்த்தியாக செயல்படுவேன்.  அதேபோல், அரசியலுக்கு வந்த பின் சினிமாவில் நடிக்க மாட்டேன்” என அவர் கூறினார்.
அடுத்த கட்டுரையில்