கவுதமி இப்போது வருத்தப்படுவார் : கமல்ஹாசன் பேட்டி

Webdunia
செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (17:45 IST)
நடிகை கவுதமி தனது நிறுவனம் மீது கூறியுள்ள புகார் குறித்து கருத்து கூற விரும்பவில்லை என நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 
நடிகை கவுதமி 'விஸ்வரூபம் மற்றும் 'தசாவதாரம்' ஆகிய படங்களில் தான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதற்கு தனக்கான சம்பளத்தை ராஜ்கமல் நிறுவனம் தரவில்லை என்றும் திடீரென குற்றசாட்டை எழுப்பினார்.
 
அந்நிலையில் கவுதமியின் குற்றச்சாட்டுக்கு ராஜ்கமல் நிறுவனம் அளித்த பதிலில் “ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட படங்களில், காஸ்ட்யூம் டிசைனராக கவுதமி பணியாற்றியதற்கான சம்பளத் தொகை அனைத்தும் கொடுக்கப்பட்டுவிட்டது. மாறாக, ராஜ்கமல் நிறுவனம் பணம் தரவேண்டியிருப்பதற்கான ஆதாரங்களைக் கவுதமி கொடுப்பாரேயானால், நிச்சயம் நாங்கள் பணம் தரத் தயாராகவே இருக்கிறோம். கமல்ஹாசன் புதிதாக அரசியல் கட்சி தொடங்கி வழி நடத்திவரும் இவ்வேளையில், இப்படியொரு பிரச்னையை கவுதமி எழுப்பியிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது” எனக் கூறப்பட்டிருந்தது.
 
அதற்கு பதிலளித்துள்ள கவுதமி “ஆதாரமின்றி எந்த காரணமும் இல்லாமல் நான் யார் மீதும் புகார் கூறவில்லை. யாரிடமும் நான் எதிவும் எதிர்பார்க்கவில்லை. சம்பள பாக்கியை சம்பந்தப்பட்ட நிறுவனம் தந்தாலே போதும். உண்மை நிலையை அறியாமல் பேசுவது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது” என அவர் விளக்கம் அளித்தார்.

 
இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த அவர்  “கவுதமி கூறிய புகாரை கவனித்துக்கொள்ள எனது நிறுவனத்தில் அதிகாரிகள் இருக்கிறார்கள். அதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அவருக்கு ஏதேனும் நிலைவை இருந்தால் அது கொடுக்கப்படும். என்னை விட்டு பிரிந்து போனதற்காக அவர் இப்போது வருத்தப்படுவார். அவர் கூறியது பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் என்னால் கருத்து கூற முடியாது” என அவர் பதிலளித்தார்.
 
மேலும்,விழுப்புரத்தில் சிறுவன் கொலை மற்றும் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட வேண்டும். அதேபோல், தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் இசைக்கப்பட வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்