நீதிமன்ற உத்தரவை மீறக் கூடாது: கமல்ஹாசன்

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2017 (00:49 IST)
நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தலாமா? வேண்டாமா? சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில் என்ன கூறியிருக்கின்றது என்பது குறித்து பலர் குழப்பம் அடைந்துள்ளனர். 



 
 
நீட் தேர்வு குறித்த போராட்டங்களை நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதே நேரத்தில் அந்த போராட்டம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுதான் சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள உத்தரவு
 
இந்த நிலையில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து கமல் தனது டுவிட்டரில் கூறியபோது, 'நீதிமன்றத்தை அவமதிக்க கூடாது, நீதிமன்ற உத்தரவை மீறவும் கூடாது. நீதித்துறையை சரியான நோக்கில் பயன்படுத்துவோம். நம்மால் சரியாக பயன்படுத்த முடியும். அரசியலமைப்புக்குட்பட்டு எல்லாவற்றையும் விவாதிக்க முடியும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்