இன்னுமா கள்ளநோட்டு கலாச்சாரம்? கமல்ஹாசன் வேதனை

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (22:09 IST)
தமிழகத்தில் நேற்று ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது என்பது தெரிந்ததே. இதில் உத்திரமேரூரை சேர்ந்த பார்வதி என்ற பெண்ணின் ஓட்டை வேறு யாரோ கள்ள ஓட்டாக செலுத்தி விட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இதனை அடுத்து அவருக்கு 49b என்ற பிரிவின்படி பார்வதி என்ற பெண்ணுகு வாக்களிக்க தேர்தல் அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.விஜய் நடித்த சர்க்கார் படத்தில் இடம்பெற்ற 49b விழிப்புணர்வு அந்த பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகத்தில் கள்ள ஓட்டு கலாச்சாரம் இன்னும் இருக்கிறது என்பதை அறிந்து வேதனைப்படுகிறேன் என்று கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது
:
 
உத்திரமேரூரில் கள்ள ஓட்டை எதிர்த்துப் போராடி தனது வாக்கைப் பதிவு செய்திருக்கிறார் பார்வதி. அவரது துணிச்சல் மெச்சத்தக்கது. இவர்களைப் போன்றவர்களால்தான் ஜனநாயக மாண்புகள் உயிர்த்திருக்கின்றன. இன்னும் கள்ள ஓட்டுக் கலாச்சாரம் தொடர்வது தமிழகத்தின் அவலம்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்