கமல்-ராகுல்காந்தி திடீர் சந்திப்பு: திட்டம் என்ன?

Webdunia
புதன், 20 ஜூன் 2018 (16:07 IST)
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தேர்தல் கமிஷன் அழைப்பின்பேரில் டெல்லி சென்றுள்ளார் என்பது தெரிந்ததே. அவரது கட்சிக்கு தேர்தல் கமிஷன் இன்று அங்கீகாரம் வழங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கமல்ஹாசனின் டெல்லி பயணத்தின்போது அவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களையும் சந்தித்து அவரது தர்ணா போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியையும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
ராகுல்காந்தியை சந்திக்க கமலுக்கு அப்பாயின்மெண்ட் கிடைத்துள்ளதாகவும், இந்த சந்திப்பின்போது அவர் தமிழக அரசியல் நிலவரம் குறித்து ராகுல்காந்தியிடம் ஆலோசனை செய்யவிருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்றபோது பெங்களூரில் ராகுல்காந்தியை கமல்ஹாசன் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்