விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

Siva
ஞாயிறு, 23 ஜூன் 2024 (17:39 IST)
ஒரு விபத்து நடந்தால் உடனே வாகனங்களை எல்லாம் நிறுத்தி விட முடியுமா? அது போல் தான் ஒரு அசம்பாவிதம் நடந்தால் அதற்காக மதுக்கடைகளை மூட முடியாது என்று நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணம் குறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று கமல்ஹாசன் கள்ளக்குறிச்சி சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆதரவு ஆறுதல் கூறினார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது சாலை விபத்து நடந்தது என்பதற்காக போக்குவரத்தையே நிறுத்த முடியுமா? அது போல் தான் சில அசம்பாவிதங்கள் நடைபெறுகிறது என்பதற்காக மதுவை ஒழிக்க முடியாது.

மதுவை ஒழித்ததனால் ஏற்பட்ட பல விபரீதங்களை அமெரிக்கா உட்பட பல நாடுகள் சந்தித்துள்ளன. ஆனாலும் மதுவை குறைத்துக் குடியுங்கள் என்று அறிவுரை செய்யலாம், இது குறித்த பதாகைகள் டாஸ்மாக் பக்கத்தில் வைக்கலாம், அரசும் மது மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை விழிப்புணர்வுக்காக செலவு செய்யலாம்’ என்று கூறினார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்