கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்: ஒரே இடத்தில் உயிரிழந்தோரை தகனம் செய்ய ஏற்பாடு!

Mahendran
வியாழன், 20 ஜூன் 2024 (12:25 IST)
கள்ளக்குறிச்சியில் நேற்று விஷ சாராயம் குடித்து முதலில் ஐந்து பேர்கள் பலியானதாக தகவல் வெளியான நிலையில் அடுத்தடுத்து பலியானோர் எண்ணிக்கை அதிகரித்தே வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது வரை 30 பேர்கள் பலியாகி இருப்பதாகவும் 60-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ஒரு படி மேலே போய் பாஜக போராட்டத்தை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் என அறிவித்துள்ள முதல்வர், அதிரடி நடவடிக்கையாக கள்ளச்சாராயத்தை ஒழிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களை ஒரே இடத்தில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் தான் தகனம் செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்