ஒரு சாராய பாட்டில் கூட இருக்கக் கூடாது.. கள்ளக்குறிச்சியை சல்லடை போடும் 1000 போலீஸ்படை!

Prasanth Karthick

வியாழன், 20 ஜூன் 2024 (11:45 IST)
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் பலியான நிலையில் மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராய வியாபாரிகளை தேடி பிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.



கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் கிராமத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்த 80க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேரம் ஆக ஆக பலி எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது வரை 32 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்கும் கும்பலை பிடிக்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி முழுவதும் சுமார் 1000 போலீஸார் கிராமங்கள் முழுவதும் சல்லடை போட்டு சாராய வியாபாரிகளை தேடி பிடித்து வருகின்றனர். அவர்கள் வைத்திருக்கும் கள்ளச்சாராய கலவை ஊறல் போன்றவற்றையும் பறிமுதல் செய்து அழிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது வரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கள்ளச்சாராய சப்ளை செயினை மொத்தமாக அழிக்க வேண்டும் என காவல்துறை தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்