ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்ட கலைஞர் நினைவு நாணயம்!

Webdunia
வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (11:11 IST)
சமீபத்தில் கலைஞர் நினைவு நாணயம் வெளியிடப்பட்ட நிலையில் அதற்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகம் வந்திருந்தார். இது சம்மந்தமாக அரசியல் வட்டாரத்தில் சலசலப்புகள் விமர்சனங்கள் எழுந்தன. இந்த 10 ரூபாய் நாணயத்தின் விலை 10 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாணயம் அண்ணா அறிவாலயத்தில் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் 500 நாணயங்கள் ஐம்பது லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் இன்று திமுக, தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து கலைஞர் நினைவு நாணயத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்