”ஜனசங்கத்தினர் வீசிய செருப்பு தான் ராமர் மீது பட்டது” கீ.வீரமணி பகீர்

Arun Prasath
செவ்வாய், 21 ஜனவரி 2020 (12:51 IST)
ஜனசங்கத்தினர் பெரியார் மீது வீசிய செருப்பு தான் ராமர் படம் மீது பட்டது என கீ.வீரமணி தெரிவித்துள்ளார்.

துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், பெரியார் குறித்து ரஜினிகாந்த் கூறியதில் சர்ச்சைக்குள்ளான நிலையில் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிட கழகத்தினர் கூறி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து ரஜினி காந்த் தான் கூறியதில் எந்த தவறுமில்லை, தான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமும் இல்லை என கூறினார். இந்நிலையில் இது குறித்து திராவிட கழகத்தின் தலைவர் கீ.வீரமணி, “ரஜினி கூறியதில் எந்த உண்மையும் இல்லை, அவர் துக்ளக்கை ஆதாரமாக காட்டாமல் 2017-ல் வந்த வேறு பத்திரிக்கையில் வந்ததை ஆதாரமாக காட்டுவது ஏன்? ராமர் சீதை ஆடையின்றி  காட்டவேண்டிய அவசியம் திகவுக்கு  கிடையாது” என கூறியுள்ளார்.

மேலும், 1971-ல் சேலத்தில் நடந்த போராட்டத்தில் பெரியார் மீது ஜனசங்கத்தினர் செருப்பை எறிந்தார்கள். அந்த செருப்பு பெரியார் மீது படாமல் ராமர் மீது பட்டது” எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்