திருமணம் ஆனவுடன் குழந்தை பிறக்காது – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் !

Webdunia
வியாழன், 7 மார்ச் 2019 (14:01 IST)
பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்படும் திட்டங்கள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு திருமணம் ஆனவுடன் குழந்தை பிறக்காது என விளக்கமளித்துள்ளார்.

சமீப காலமாக தமிழக பள்ளிக்கல்வித்துறை பல அதிரடி மாற்றங்களை செய்து கொண்டிருக்கின்றது. 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுதேர்வு என்ற அறிவிப்பு உள்பட பல அறிவிப்புகள் பெரும் வரவேற்பை பெற்றன. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் மாநில அளவில் முதல் மதிப்பெண் போன்ற தரம் பிரிக்கும் முறைகளையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை செய்துள்ளது. அதேப்போல ஸ்மார்ட் வகுப்புகள் மற்றும் பேஸ் ரீடிங்க் வருகைப்பதிவு போன்றவையும் கவனம் பெற்றன. இதனால் பள்ளிக்கல்வித் துறையையும் அமைச்சர் செங்கோட்டையனையும் மக்கள் பாராட்டி வருகின்றனர்.

ஆனால் பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கும் திட்டம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என திமுக சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசியுள்ள அமைச்சர் செங்கோட்டையன் ’ திருமணம் ஆனவுடன் குழந்தை பிறக்காது. அதுபோல தான் அரசின் திட்டங்களும் உடனடியாக் செயல்பாட்டிற்கு வராது. இந்த் ஆண்டு அறிவித்த திட்டங்கள் அடுத்த ஆண்டில்தான் அமலுக்கு வரும் ‘ எனப் பதிலளித்துள்ளார்.

பொதுத் தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தொகையை அதிகரிக்கக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், முடிவு செய்யப்பட்டுள்ள தேதியில் பொதுத்தேர்வு முடிவுகள் கண்டிப்பாக வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்