வைகோ மீதான தேசத்துரோக வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு

Webdunia
வியாழன், 20 ஜூன் 2019 (09:11 IST)
மதிமுக பொதுசெயலாளர் வைகோ மீதான தேச துரோக வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடந்த 2009ஆம் ஆண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து அவர் மீது தேசத்துரோக வழக்கு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் பிரிவில் வழக்கு தொடரப்பட்டது
 
இந்த வழக்கு கடந்த பத்து ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் சமீபத்தில் இந்த வழக்கு எம்பி, எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 9 சாட்சிகள், வைகோவிடம் விளக்கம், குறுக்கு விசாரணைகள் , எழுத்துபூர்வமான வாதங்கள் ஆகியவை முடிந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு ஜூலை 5ஆம் தேதி வழங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு வைகோவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யக்கூடியதாக இருக்கும் என கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்