"யார் ராகுல் ?" என்று ஆணவத்தோடு கேட்டவர்களுக்கு பதிலடி.. ஜோதிமணி எம்பியின் பதிவு..!

Siva
திங்கள், 1 ஜூலை 2024 (21:49 IST)
ராகுல் காந்தி இன்று பாராளுமன்றத்தில் ஆவேசமாக முழங்கியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் யார் ராகுல் என்று கேட்டவர்களுக்கு தக்க பதிலடி கிடைத்துள்ளது என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது”

ராகுல் காந்தி என்கிற எதிர்க்கட்சித் தலைவர் என்ன செய்வார் என்பதை இன்று நாடாளுமன்றத்தில் நிரூபித்தார் ராகுல்.

 "யார் ராகுல் ?"  என்று ஆணவத்தோடு கேட்ட பிரதமர் மோடியையும்,பாஜகவையும் நாடாளுமன்றத்தில் வைத்து பங்கம் செய்தார் ராகுல்.

எதிர்க்கட்சிகளின் குரலாகவும், மக்களின் குரலாகவும் உண்மையின் குரலாகவும்  அவர் ஒலித்தார். அன்பின் வடிவமாக அவர் அவையில் நின்றார்.

அதை எதிர்கொள்ள முடியாமல் ஒட்டு மொத்த அரசாங்கமும் அலறியது. ஆனால் நாடு அவரைக் கொண்டாடி கொண்டிருக்கிறது. இது இந்தியாவின் வெற்றி.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்