ஜல்லிக்கட்டை முடக்கியாச்சு: சென்னைக்கு வந்து இறங்கியது 60 ஜெர்சி பசுக்கள்!

Webdunia
புதன், 18 ஜனவரி 2017 (10:51 IST)
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்து தீயாய் பரவி வருகிறது தமிழகத்தில். மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களின் தன்னெழுச்சியால் தமிழகம் போராட்டகளமாகியுள்ளது.


 
 
எங்கள் பாரம்பரியம் கலாச்சாரத்தை அழிக்கிறார்கள் என்பதுதான் போராட்ட களத்தில் இருப்பவர்கள் கூறும் முக்கிய காரணம். ஆனால், நாம் புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய காரணம் நாட்டு மாடுகளை அழிக்கும் நடவடிக்கைத்தான் இந்த ஜல்லிக்கட்டு தடை.
 
இந்த ஜல்லிக்கட்டு தடைக்கான காரணம் நாட்டு மாடுகளை அழித்து, வெளிநாட்டு ஜெர்சி பசுக்களை இறக்குமதி செய்வதுதான் என்றும், இந்த பசுக்களின் பாலினால் சர்க்கரை வியாதி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அப்படி ஏற்படும் பட்சத்தில் மருந்துக்காக வெளிநாட்டின் உதவியை நாடவேண்டி இருக்குமாம் என்கிறார்கள் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்.
 
சட்வதேச கைக்கூலியாக இருக்கும் பீட்டா இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தடையை நீக்க மாநிலம் முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால் இந்த அசாதாரண சூழலில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் வைக்கும் குற்றச்சாட்ட்டை நிரூபிக்கும் விதமாக தற்போது சென்னை ஏர்ப்போர்ட்டில் டென்மார்கிலிருந்து 60 ஜெர்சி பசுக்கள் வந்திறங்கியதாக புகைப்படத்துடன் வாட்ஸ்அப்பில் செய்தி வெளியாகியுள்ளது.


 
 
இந்த தகவலால் மாநிலம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோபமடைந்துள்ளனர். சென்னை மெரீனாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தெரிவிக்கையில், சென்னையில் ஜெர்சி பசுக்கள் இறக்குமதியான காரணம் என்ன என்று சொல்லியே ஆகவேண்டும் என கோஷமிட்டு வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்