போயாஸ் கார்டன் வாங்க.. ஸ்பெஷல் டீ தர சொல்கிறேன் - ஜெ.வின் நினைவுகளை பகிரும் செவிலியர்கள்

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2016 (12:20 IST)
உடல் நலக்குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களாக தொடர் சிகிச்சை எடுத்த வந்த அவர், கடந்த 5ம் தேதி மரணமடைந்தார். 


 

 
இதையடுத்து, மருத்துவமனையில் அவரை கவனித்த வந்த சில செவிலியர்கள் (நர்ஸ்) அவருடனான தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
 
தன்னை தினந்தோறும் கவனித்து கொள்ளும் செவிலியர்களுக்கு ‘கிங்காங்’ என செல்லப்பெயர் வைத்து அழைத்துள்ளார் ஜெயலலிதா. அவர்கள் அறைக்குள் நுழைந்ததுமே அவர்களைப் பார்த்து புன்னகைப்பார். தனக்காக இல்லையென்றாலும் அவர்களுக்காவது கொஞ்சம் சாப்பிடுவார். 
 
அவருக்கு மிகவும் பிடித்த உணவுகளை விரும்பி சாப்பிடுவார். அப்பல்லோவில் கொடுக்கப்படும் டீ அவருக்கு பிடிக்கவில்லை. எனவே ஒருமுறை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அறைக்குள் இருந்த போது “ வாங்க எல்லோரும் போயாஸ்கார்டன் வீட்டுக்கு வாங்க. உங்களுக்கு ஸ்பெஷல் கொட நாடு டீ தரச் சொல்கிறேன் என்று கூறினார். ஆனால் அது நடக்காமலேயே போய்விட்டது” என்று அவருடனான தன்னுடைய நினைவுகளை ஒரு செவிலியர் சோகமாக பகிர்ந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
அடுத்த கட்டுரையில்