தமிழக முதல்வர் ஜெயலலிதா, உணவு உண்ணும் அளவுக்கு உடல் நிலை தேறிவிட்டார் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க பல்வேறு அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லீன் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் இன்று அப்பல்லோவிற்கு வந்தார். முதல்வருக்கு அளித்து வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். முதல்வர் ஜெயலலிதா உணவு எடுத்துக் கொள்ளும் அளவிற்கு தேறி வருவதாக, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தம்மிடம் கூறியதாகவும், தமிழக மக்களின் பிரார்த்தனைகளால் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் அவர் தெரிவித்தார்.