’தல அஜித் அதிரடி’ - தன் வீட்டு பணியாளர்களுக்கு மேலும் ஒரு உதவி!

Webdunia
புதன், 12 அக்டோபர் 2016 (20:36 IST)
நடிகர் அஜித் தற்போது சிவா இயக்கத்தில் தனது 57 வது படத்தில் நடித்து வருகிறார்.


 
 
இரண்டாண்டுகளுக்கு முன்னர் அஜித் தன் வீட்டில் பணிபுரியும் அனைவருக்கும் சொந்தமாக வீடு கட்டி கொடுத்தார். இப்போது தனது வீட்டில் பணிபுரிபவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி தரும் விஷயம் ஒன்றையும் செய்துள்ளார். 
 
அஜித், தன் வீட்டில் வேலை செய்பவர்கள் வந்து செல்ல ஏற்கனவே வாகனம் ஒன்றை அமைத்து கொடுத்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் அஜித் வீட்டிலிருந்த நேரம் பணியாளர்கள் பணிக்கு தாமதமாக வந்துள்ளனர். தாமதமாக காரணத்தை அஜித் கேட்டுள்ளார்.
 
அப்போது அவர்கள், நேற்று இரவு முழுக்க தங்கள் பகுதிகளில் மின்சாரம் இல்லாததால் வீடுகளில் மின்சாரம் இல்லை, இதனால் சரியாக தூங்கவில்லை என்று காரணம் சொல்லியிருக்கிறார்கள். இதைக்கேட்ட அஜித் உடனடியாக தன் பணியாளர்களின் வீடுகள் அனைத்திலும் அதுவும் தரம் வாய்ந்த நல்ல இன்வெர்ட்டர்களை அமைத்து தரும்படி உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்