முட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் டிடிவி தினகரன்: ஜெயகுமார் விமர்சனம்!

Webdunia
வியாழன், 12 ஜூலை 2018 (20:56 IST)
அதிமுகவின் முக்கிய தலைவரான மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் இன்று செய்தியாளர்களை சந்திப்பில் டிடிவி தினகரனை விமர்சனம் செய்துள்ளார். 
 
அப்போது, முட்டை கொள்முதல் முறைகேடு போன்று வேறு பல முறைகேடுகளும் வர வாய்ப்புள்ளதாகவும், தமிழக ஆட்சியாளர்கள் அரசாங்கத்தை தங்கள் சொந்த நிறுவனமாக கருதுவதாகவும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளாரே? என கேள்வி எழுப்பட்டது. 
 
அதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்தார். அவர் கூறியதாவது, வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக வந்த தகவல்களின் அடிப்படையில் கிறிஸ்டி நிறுவன உரிமையாளர்களின் இல்லங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. 
 
முட்டை கொள்முதலில் முறைகேடு என வருமான வரித்துறை சொல்லவில்லை. இந்த விவகாரம் திசை திருப்பப்படுகின்றது. முட்டை தவிர்த்து வேறு விதமான பொருட்களும் அவர்கள் சப்ளை செய்யலாம். வருமான வரி சோதனைக்கும் முட்டை கொள்முதலுக்கும் சம்மந்தப்படுத்த முடியாது. 
 
வரி ஏய்ப்பு நடைபெற்றதா இல்லையா என்பதுதான் கேள்வி. அது தொடர்பாகத்தான் வருமான வரித்துறை விசாரணை நடக்கிறது. இவர்கள் ஏன் துடிக்கிறார்கள்? முட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு தமிழக அரசின் மீது களங்கம் கற்பிக்க முயற்சி நடைபெறுகிறது. இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்