எந்த உலகத்தில் இருக்கிறார் எனத் தெரியவில்லை - கமலை கலாய்த்த ஜெயக்குமார்

Webdunia
திங்கள், 22 ஜனவரி 2018 (14:32 IST)
தமிழகம் ஏற்கனவே டிஜிட்டல் மயம் ஆகிவிட்டது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 
சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற கனரா வங்கியின் டிஜிட்டல் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் கமல்ஹாசன் “ இளைய இந்தியா டிஜிட்டல் உலகத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறாது. டிஜிட்டல் உலகம்தான் புதிய வழித்தடம். டிஜிட்டல் வங்கிகள் மட்டுமில்லாமல், டிஜிட்டல் கல்வி, டிஜிட்டல் பொழுது போக்கு என அனைத்தும் மாற வேண்டும். அதை என் ஆயுளுக்குள் நடக்கப் பார்த்து விட்டுத்தான் செல்வேன்” எனப் பேசியிருந்தார்.
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் “ கமல் எந்த உலகத்தில் இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவருக்கு வரலாறு தெரியாவிட்டால் என்னிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். தமிழகம் ஏற்கனவே டிஜிட்டல் மயமாகிவிட்டது. அதற்கான பணிகள் 2001ம் ஆண்டே தொடங்கிவிட்டது. இந்நிலையில், தமிழகத்தின் அனைத்தும் டிஜிட்டல் மயமாக வேண்டும் என கமல்ஹாசன் பேசியிருப்பது அவரின் அறியாமையைக் காட்டுகிறது” எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்