வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி தனது பிறந்த ஊரான ராமநாதபுரத்தில் அதனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாகவும், மறைந்த முன்னள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்தார்.
அந்நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள கனரா வங்கியின் டிஜிட்டல் கிளை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன் “எனது ஆயுள் முடிவதற்குள் இந்தியாவை பெருமையடைய செய்வேன். இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்தே தொடங்கும். அதற்கான எனது பயணம் அடுத்த மாதம் தொடங்கும். அப்போது எனக்கு பல சகோதரர்கள் கிடைப்பார்கள்” என அவர் பேசியுள்ளார்.
மேலும், இன்று காலை தனது இல்லத்தில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். முடிவில், மதுரையில் பிப்ரவரி 24ம் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.