இந்திய நாட்டிற்கான செயல்திட்டத்தை ஆர்.எஸ்.எஸ் தான் இயற்றுகிறதா? கனிமொழி எம்.பி., கேள்வி

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (17:05 IST)
''பாரத குடியரசு தலைவர் என்ற பெயரில் இதுவரை அழைப்பிதழ்கள் வந்து  பார்த்ததில்லை'' என்று  திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு இந்தியா என்ற பெயரை பாரதம் என்று மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகும் நிலையில் மத்திய அரசின் ஜி20  அழைப்பிதழில், 'பாரத்' குடியரசுத் தலைவர் என்று அச்சிடப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில்,  இதுகுறித்து, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளை உள்ளடக்கிய 'இந்தியா' என்ற கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக எம்பி கனிமொழி, ‘’பாரத குடியரசு தலைவர் என்ற பெயரில் இதுவரை அழைப்பிதழ்கள் வந்து நாங்கள் பார்த்ததில்லை…. அழைப்பிதழ்களில் இந்திய குடியரசுத் தலைவர், இந்திய பிரதமர் என்றுதான் அச்சிடப்படும் …இப்போது ஏன் மத்திய அரசு இப்படி செய்தனர்.? இதற்கான உள்நோக்கம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ‘’சமீபத்தில் இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கூறியிருந்த நிலையில், தற்போது இந்த அழைப்பிதழை பார்க்கும்போது, இந்திய நாட்டிற்கான செயல்திட்டத்தை ஆர்.எஸ்.எஸ்தான் இயற்றுகிறதா என கேள்வி எழுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்