திமுகவுக்கு எதிராக சீமான், அதிமுகவுடன் இணைய தயாரா?

Siva
திங்கள், 10 மார்ச் 2025 (15:58 IST)
திமுகவுக்கு எதிரான வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வரும் நிலையில், "இந்த கருத்தை நான் வரவேற்கிறேன். இதில் என் பங்கு முக்கியமானதாக இருக்கும்" என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்.

ஆனால், "நான் மட்டும் தனியாக இருப்பேன். கூட்டணியில் இல்லாமல் வெல்ல முடியும். கொள்கை இல்லாமல் கூட்டணி மட்டும் வென்றுவிடுமா? கூட்டணிகள் வெற்றி பெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன சாதித்துவிட்டனர்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நான் ஒரு நாள் மட்டும் தொப்பி போட்டு வேஷம் போடும் இஸ்லாமியர் அல்ல. தம்பி விஜய் இதை விரும்புகிறாரா? என்று சீமான் கேள்வி எழுப்பினார். விஜய் நோன்பு கஞ்சி குடித்ததால், விலைவாசி ஏறியது, மின்சாரம் தடைப்பட்டது எல்லாம் சரியாகிவிட்டதா?

 மீனவர் விவகாரத்தில், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அக்கறை காட்டவில்லை. அதேபோல், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இந்த மக்களின் எதிர்காலத்தை பற்றி கவலைப்படவில்லை. கேரள மீனவர்களை இதுவரை இலங்கை அரசு கைது செய்துள்ளதா?" என்று சீமான் கேட்டுள்ளார்


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்