தீபாவளி தினத்தில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு சிக்கன் பிரியாணி? விசாரணைக்கு உத்தரவு..!

Siva
செவ்வாய், 5 நவம்பர் 2024 (07:20 IST)
தீபாவளி தினத்தில் கோவிலில் பணி செய்யும் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி வழங்கப்பட்டதாக கூறப்பட்டதை அடுத்து,   இது குறித்து விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுவையில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலில் தீபாவளி தினத்தில் துணி, பட்டாசு ஆகியவை வழங்கியபோது சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி வழங்கியதாக தகவல்கள் பரவியது. இந்த தகவல் குறித்து துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதனுக்கு புகாராக சென்ற நிலையில், இது குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் அடிப்படையில், இந்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, மணக்குள விநாயகர் கோவிலில் சிக்கன், மட்டன் பிரியாணி வழங்கப்பட்டதா என விசாரணை செய்து வருகிறோம் என்றும், கோயிலுக்கு வெளியே ஊழியர்களுக்கு புத்தாடை மற்றும் உணவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது; ஆனால் அது கோயிலுக்குள் வழங்கப்பட்டதா என்று விசாரணை செய்கிறோம் என்று கூறினார்.

மேலும் சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வில் உட்படுத்தி உள்ளோம். கோவில் நிர்வாகம் தவறு செய்திருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்