பாளையம்கோட்டையில் பொங்கல் தொகுப்பு திட்ட பணிகள் தீவிரம்!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (08:35 IST)
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழக்கப்பட்டு வருகிறது.  அதன்படி இந்த ஆண்டும் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 20 பொருட்கள் மற்றும் முழு கரும்பு கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
 
இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, காலை 10:40 மணி அளவில் பாளையங்கோட்டை மகாராஜா நகர் அரசு அலுவலர் வீட்டு வசதி வாரிய குடியிருப்புபகுதியில் உள்ள நியாய விலை கடையில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புனை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடங்கி வைக்க உள்ளனர். இதற்கான பேக்கிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்