தமிழகத்தில் உளவுத்துறை ஐஜி திடீர் இடமாற்றம்: என்ன காரணம்?

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (20:28 IST)
தமிழகத்தில் உளவுத்துறை ஐஜி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் அடைந்த சம்பவத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்துவார்கள் என்பதை முன்கூட்டியே கணிக்காதது உளவுத்துறையின் தோல்வி என பல அரசியல் விமர்சகர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் பேட்டி அளித்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது
 
இதனை அடுத்து உளவுத்துறை இடமாற்றம் செய்யப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென தமிழக அரசு உளவுத்துறை ஐஜி ஆசை அம்மாள் உள்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது
 
ஏற்கனவே கள்ளக்குறிச்சி கலெக்டர் மற்றும் எஸ்பி இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது உளவுத்துறை ஐஜியும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்