மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றம்

ஞாயிறு, 12 ஜூன் 2022 (16:05 IST)
தமிழக மருத்துவத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் அவர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக செந்தில்குமார் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
கடந்த அதிமுக ஆட்சியில் ஆட்சியிலிருந்தே சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் திடீரென மாற்றப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்