குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (12:03 IST)
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
ஜனவரி 27ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் அதனை உறுதி செய்துள்ளது 
 
இந்திய பெருங்கடலையின் கிழக்கு பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக குறைந்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த இரண்டு நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும் இதன் காரணமாக தமிழக கடலோர பகுதியில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்