இப்பதான் தொடங்குனாங்க… அதுக்குள்ள கேட்டு போட்ட மழை – கேப்டன் மில்லர் படக்குழு அப்செட்!

வியாழன், 26 ஜனவரி 2023 (15:06 IST)
கேப்டன் மில்லர் திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி தென் தமிழகத்தில் தொடங்கியுள்ளது.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ள நிலையில் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ஆனால் தொடங்கி சில நாட்கள் மட்டுமே நடந்த நிலையில் அங்கு மழைப் பெயவதால் கடந்த சில நாட்களாக ஷூட்டிங் நடக்கவில்லையாம். அதனால் படக்குழு மொத்தமே அப்செட் ஆகியுள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்