சுகாதாரமற்ற பூச்சிக்கொல்லி பால் பாக்கெட்டுகள்???: தமிழகம் முதலிடம்!

Webdunia
வெள்ளி, 18 அக்டோபர் 2019 (19:21 IST)
பாக்கெட்டுகளில் விற்கப்படும் பால் பாக்கெட்டுகள் சுகாதாரமற்றவையாக இருப்பதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாள்தோறும் கடைகளில் வாங்கப்படும் பால் பாக்கெட்டுகள் மற்றும் அதன் தரம் குறித்து இந்திய அளவில் மாபெரும் ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம். ஆராய்ச்சியில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன.

நாடெங்கிலும் உள்ள தனியார் பால் பாக்கெடுகள் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவற்றில் மூல பாலின் அளவை விட பூச்சிக்கொல்லிகளும், அப்லாடாக்சின் என்ற அசுத்தமும் அதிகளவில் கலந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சுமார் 3825 பால் மாதிரிகள் சோதிக்கப்பட்ட நிலையில் அதில் 47 சதவீதம் மட்டுமே ஆரோக்கியமான பால் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் அசுத்தமான பால் விற்பனையாகும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. இரண்டாம் இடத்தில் டெல்லியும், மூன்றாம் இடத்தில் கேரளாவும் உள்ளன.

பாலில் இதுபோல அசுத்தங்களும், கலப்படங்களும் அதிகமாகமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளதாக தர நிர்ணய ஆணையர் பவன் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்