மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கரூரில் நடைபெற்ற இந்தியன் சர்க்கஸ்

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (21:47 IST)
75ஆவது  சுதந்திர தின அமுத நாள் அன்று மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கரூரில் நடைபெரும் இந்தியன் சர்க்கஸ் பார்த்து ரசித்து மகிழ ஓர் ஏற்பாட்டை கரூரில் உள்ள சமூக செயல்பாட்டு அமைப்புகள் செய்திருந்தன.
 
 
இந்நிகழ்வு வாயிலாக  அன்பாலயம், சக்தி தமிழ் பள்ளிகளில் பயிலும் 75 மாற்று திறனாளி குழந்தைகள் கரூரில் நடைபெற்ற இந்தியன் சர்க்கஸை கண்டு களித்தனர்.
 
 
முத்தமிழ் கலைகளின் இலக்கிய சங்கமம்,இந்திய சிறு தொழில் வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம், அகம் தொலைக்காட்சி ,ஹெல்ப் டு ஹெல்ப் ரத்ததான குழு ஆகிய அமைப்புகள் இந்த வித்தியாசமான ஏற்பாட்டை செய்திருந்தன.
 
 
இந்த அமைப்புகளைச் சேர்ந்த வழக்கறிஞர்.  Dr. K. P. ரமேஷ் பாபு, ஜி சிவராமன், J.பிரபு ஆனந்த், ராஜேஷ் ,மகுடபதி , சரவணன் , கருப்பையா மற்றும் சர்க்கஸ் நிர்வாகிகள் குழந்தைகளை வரவேற்று சர்க்கஸை காண வைத்தனர்.
 
 
இந்நிகழ்வை மேற்கண்ட அமைப்புகளின் முக்கிய பொறுப்புகளை வகிக்கும் முகுந்தன், ரமேஷ் பாபு ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்