வெவ்வேறு இலக்குகளை அழிக்கும் பினாகா ஏவுகணை! – சோதனை வெற்றி!

Webdunia
ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (16:30 IST)
பல்வேறு இலக்குகளை பயணித்து தாக்கி அழிக்கும் இந்தியாவின் பினாகா ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்

இந்தியா தனது ராணுவ பாதுகாப்பை அதிகப்படுத்த வெளி நாடுகளிடமிருந்து ஆயுதங்கள் வாங்கப்படும் நிலையில், உள்நாட்டிலும் ராணுவ தளவாடங்கள் செய்வதில் வெற்றிகரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ப்ரமோத் உள்ளிட்ட ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன.

இந்நிலையில் நேற்று ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பினாகா ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. இந்த பினாகா ஏவுகணை 40 கி.மீ தொலைவு வரை வெவ்வேறு தூரங்களில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. மேலும் ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்படும் சந்த் ஏவுகணை சோதனையும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்