10 மாநிலங்கள் ஜாக்கிரத்தையாக இருக்க வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை!

ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (09:58 IST)
10 மாநிலங்கள் ஜாக்கிரத்தையாக இருக்க வேண்டும்: மத்திய அரசு எச்சரிக்கை!
இந்தியாவில் உள்ள 10 மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்த பத்து மாநில அரசுகளும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
 
கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் கேரளா, சிக்கிம், மணிப்பூர் உள்பட 10 மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் இதனை அடுத்து அம்மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதார செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்
 
ஏற்கனவே ஒரு சில நாடுகளில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை பரவி வருகிறது என்பதும் அது மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதால் இந்தியாவில் உள்ள ஒருசில மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்