தயாரிப்பாளர் தாணுவின் அலுவலகத்தில் 4வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (07:50 IST)
தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு உள்பட ஒரு சில முக்கிய தயாரிப்பாளர்களின் வீடுகளில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் இன்று நான்காவது நாளாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு உள்பட ஒரு சில தயாரிப்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 வருமான வரி அதிகாரிகள் தயாரிப்பாளர்களின் வீடுகளிலேயே இரவு தூங்கி காலையில் திரும்பவும் எழுந்து சோதனையை தொடர்வதாக கூறப்பட்டு வருகிறது
 
 மேலும் பிரபல பைனான்சியர் மற்றும் வினியோகஸ்தர் அன்புசெழியன் வீட்டிலும் நான்காவது நாளாக சோதனை நடந்து வருவதாக கூறப்படுவதால் தமிழ் திரையுலக வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்