‘செயலற்ற தலைவர்’ மு.க.ஸ்டாலின்: நடராஜன் அதிரடி!

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (12:36 IST)
திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு அரசியல் வட்டாரத்தில் மு.க.ஸ்டாலின் முன்பு இருந்ததைவிட அதிக சுறுசுறுப்புடன் செயல்பட்டு வருகிறார். கிட்டத்தட்ட திமுகவின்  தலைவருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களுடனும் அந்த கட்சியை வழிநடத்தி வருகிறார்.


 
 
இந்நிலையில் அதிமுக தற்காலிக பொதுச்செயலாளராக உள்ள சசிகலாவின் கணவர் நடராஜன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை செயலற்ற தலைவர் என விமர்சித்துள்ளார்.
 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் வரும் முதல் பிறந்த நாள் விழா என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
 
இதனையடுத்து தஞ்சாவூரில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் சசிகலாவின் கணவர் நடராஜன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் அதிமுகவை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் சேர அழைப்பு விடுத்தார். மேலும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை செயலற்ற தலைவர் என விமர்சித்தார்.
 
இதே போல நேற்று அதிமுக துணை பொதுச்செயலாளராக பதவியேற்ற டிடிவி தினகரனும் தனது முதல் பேட்டியிலேயே திமுக தான் எங்கள் எதிரி என கூறி திமுகவை எதிர்க்க ஆரம்பித்துவிட்டார்.
அடுத்த கட்டுரையில்