சென்னை அருகே உள்ள நெமிலிகுப்பம் கடற்கரையில் சுமார் ஒரு கிலோமீட்டர் இடைவெளியில் 20 ஆமைகள் இறந்து கிடந்ததாகவும், அதேபோல் ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் 8 ஆமைகள் இறந்து கிடந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு இதேபோன்று சில ஆமைகள் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கொத்துக்கொத்தாக ஆமைகள் உயிரிழந்து கரை ஒதுங்கியிருப்பது வன விலங்குகள் ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, "மீனவர்கள் மீன்பிடிக்க பயன்படும் வலைகளில் ஆமைகள் சிக்கி உயிரிழந்திருக்கலாம். மேலும், ஆமைகள் பாதுகாப்பு குறித்து மீனவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்," என கூறியுள்ளார்.