புயல், மற்றும் கனமழையால் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக உதவி கூற உதவிக்கு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உதவி எண்களை அறிவித்துள்ளது,
வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் புயல் காரணமாக சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இன்று மதியம் புயல் கரையை கடக்கும் என்றும் இதனால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கன மழை முதல் அதிக கன மழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் போன்ற பகுதிகளில் உள்ள மின் நிலையங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் புயல் எச்சரிக்கை அடுத்து தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அவசரகால உதவி எண்களை அறிவித்துள்ளது. அந்த எண்கள் குறித்த தகவல் இதோ:
மாநில உதவி எண் - 1070
மாவட்ட உதவி எண் - 1077
வாட்ஸ் அப் எண் - 94458 69848